Pages History



2014 ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 22 ஆம் நாள் தமிழகக்கத்தோலிக்க திருச்சபைக்கு மகிழ்ச்சி நிறைந்த ஒரு பெருநாள். அன்று தான் மாண்பு மிகு திருத்தந்தை பிரான்சிசு, தமிழகத்தின் 18 ஆம் மறைமாவட்டமாக குழித்துறை மறைமாவட்டம் என்ற பெயரில் புதிய தொரு மறைமாவட்டத்தை நிறுவி, கத்தோலிக்க திருச்சபைக்கு வளம் சேர்த்தார்.

அந்தமகிழ்ச்சியைமேலும்அதிகரிக்கும்வகையில்புதியகுழித்துறைமறைமாவட்டப்பகுதியிலேயேபிறந்துவளர்ந்தஅருள்திருஜெரோம்தாஸ்வறுவேல் (சலேசிய சபை)அவர்கள்அம்மறைமாவட்டத்தின்முதல்ஆயராகநியமிக்கப்பட்டுள்ளார்என்றசெய்தியையும்திருத்தந்தைபிரான்சிசுஅதேநாளில்அறிவித்தார்.

கத்தோலிக்கதிருச்சபையின்தலைமைப்பீடமாகியவத்திக்கான்நகரிலிருந்துவெளியானஇந்தமகிழ்ச்சியானசெய்தியைக்கேட்டுகுழித்துறைமறைமாவட்டத்தின்கத்தோலிக்கமக்கள்மட்டுமன்றி, குமரிமாவட்டத்தின்அனைத்துமக்களுமேபெருமிதம்கொண்டனர்.

இருபதுஆண்டுகளுக்குமேலாகஎதிர்பார்த்துக்காத்திருந்தபுதியகுழித்துறைமறைமாவட்டம்உண்மையிலேயேஉருவாகிவிட்டதுஎன்றசெய்திஓர்இன்பஅதிர்ச்சிபோலவந்துசேர்ந்ததுஎன்றால்அதுமிகையாகாது.

1) மறைமாவட்டம்என்றால்என்ன?

குழித்துறைமறைமாவட்டத்தின்வரலாற்றைஎடுத்துக்கூறுமுன், மறைமாவட்டம்என்றால்என்னஎன்றகேள்விக்குச்சுருக்கமாகவாவதுபதில்காண்பதுதேவை. உலகளாவியகத்தோலிக்கதிருச்சபைஎன்பதுதந்தை, மகன், தூயஆவிஎன்னும்மூவொருஇறைவனின்பெயரால்ஒன்றுசேர்க்கப்பட்டு, இயேசுவின்சீடர்களாக உரோமைத்திருத்தந்தையின்தலைமையின்கீழ்வழிநடக்கின்றஅனைத்துலகஇறைமக்களின்திருக்கூட்டம்ஆகும். இந்தஇறைமக்கள்திருக்கூட்டத்தோடு, பிறகிறிஸ்தவர்கள், பிறசமயத்தினர், ஏன்எல்லாமக்களுமேவெவ்வேறுவகைகளில்தொடர்புடையவர்களே.

திருச்சபையின்நிர்வாகமுறைமைகளைநெறிப்படுத்துகின்றஏடாகிய “திருச்சபைச்சட்டத்தொகுப்பு” (Code of Canon Law) மறைமாவட்டத்தைக்கீழ்வருமாறுவரையறுக்கிறது:

மறைமாவட்டம் என்பது குருகுழாமின் ஒத்துழைப்புடன் மேய்ப்புப் பணிக்காக ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இறை மக்களின் ஒரு பகுதியாகும்; இவ்வாறு, தன் மேய்ப்பரோடு இணைந்து, தூய ஆவியில் நற்செய்தி, நற்கருணை வழியாக அவரால் ஒன்று கூட்டப்பட்டு அது ஒரு தனித்திருச்சபையாக உருப்பெறுகிறது; அதில் ஒரே, தூய கத்தோலிக்க, திருத்தூதுவர் திருச்சபை உண்மையாகவே உள்ளது; செயலாற்றுகிறது- (திருச்சபைச்சட்டம்எண்369).

உலகத்திருச்சபையின்தனிப்பகுதிகள்போலத்தம்மிலேமுழுமைகொண்டுசெயல்படுகின்றநம்பிக்கைசமூகங்கள்மறைமாவட்டங்கள்என்றால், அந்தமறைமாவட்டங்களைஉருவாக்குவதற்கும், அவற்றைஒன்றோடொன்றுஇணைப்பதற்கும், அவற்றைஅகற்றுவதற்கும்திருச்சபையின்உயர்தலைவரானதிருத்தந்தைக்குமட்டுமேமுழுஅதிகாரமும்உரிமையும்உண்டு. இதைத் திருச்சபைச் சட்டம் எண் 373 எடுத்துக் கூறுகிறது..

இவ்வாறு, இன்று ஆட்சிப் பொறுப்பில் உள்ள திருத்தந்தை பிரான்சிசின் முழு அதிகாரத்திற்கு உட்பட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலே வாழ்கின்ற கத்தோலிக்கர், பிற கிறிஸ்தவர்கள், மற்றும் எல்லா மக்களின் நலனை மேம்படுத்துவதற்காக குழித்துறை மறைமாவட்டம் உருவாக்கம் பெற்றுள்ளது என்பதை அறிந்து உளம் மகிழ்கின்றது.

2) குழித்துறை மறைமாவட்டத்தின் நில ஆள்மைக் கூறுகள்

குழித்துறை மறைமாவட்டம் எந்த எல்லைகளுக்குள் அமைந்திருக்கும் என்பதையும் திருத்தந்தை பிரான்சிசு தமது ஆவண ஏட்டில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, குழித்துறை மறைமாவட்டம் கோட்டாறு என்னும் தாய் மறைமாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்படுகிறது. குழித்துறை மறைமாவட்டத்தின் வடக்கிலும் வடகிழக்கிலும் பாளையங்கோட்டை மறைமாவட்டமும், கிழக்கிலும் தெற்கிலும் புதிய கோட்டாறு மறைமாவட்டமும், தென்மேற்காக இந்தியப் பெருங்கடலும், மேற்கில் திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டம் மற்றும் நெய்யாற்றின்கரை மறைமாவட்டமும் (கேரளம்) எல்லைகளாக அமையும் என்று திருத்தந்தை தமது ஆவணத்தில் தெளிவாக வரையறுத்துக் கூறியுள்ளார்.

கோட்டாறு மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாகின்ற மறைமாவட்டமே குழித்துறை மறைமாவட்டம் என்பதால் அதன் வரலாறு கோட்டாறு மறைமாவட்டத்தின் வரலாற்றோடு தொடக்கத்திலிருந்தே பின்னிப் பிணைந்தது என்பது சொல்லாமலே விளங்கும். எனவே, குழித்துறை மறைமாவட்டத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு கோட்டாறு மறைமாவட்டத்தின் வரலாறு இன்றியமையாததாக உள்ளது.

(கோட்டாறு மறைமாவட்டத்தின் விரிவான வரலாற்றை அறிய, கீழ்வரும் நூல்களைக் காண்க: அருட்பணி. எம். வில்லவராயன் எழுதிய The Diocese of Kottar: A Review of Its Growth [வெளியான ஆண்டு: 1956]; அருட்பணியாளர்கள் சே. ரோ.நற்சீசன், இ. பிரான்சிஸ், வ. பவுல் லியோன், வில்பிரட் பெலிக்ஸ் ஆகியோர் எழுதிய Called to Serve: A Profile of the Diocese of Kottar [வெளியான ஆண்டு: 1983]; பவள விழா மலர்: கோட்டாறு மறைமாவட்டம் 1930-2005 [வெளியான ஆண்டு: 2005]).

3) கோட்டாறு தாய் மறைமாவட்டம் ஈன்ற குழந்தை குழித்துறை மறைமாவட்டம்

குழித்துறை மறைமாவட்டம், 1930ஆம் ஆண்டில் தன்னாட்சியோடு நிறுவப்பட்ட கோட்டாறு மறைமாவட்டத்திலிருந்து பிரிந்து ஒரு புதிய மறைமாவட்டமாக உருவெடுத்துள்ளது. கோட்டாறு தாய் என்றால் குழித்துறை அதன் சேய் எனலாம். அதே நேரத்தில் கோட்டாற்றுக்கும் குழித்துறைக்கும் உள்ள உறவை “சகோதர உறவு” என்றும் நாம் கூறலாம். குழித்துறை மறைமாவட்டம் கோட்டாறு மறைமாவட்டத்திலிருந்து பிரிந்து தனி மறைமாவட்டமாக நிறுவப்பட்டதைத் தொடர்ந்து அந்த இரு மறைமாவட்டங்களும் சம மதிப்பும் மாண்பும் கொண்ட திருச்சபைப் பகுதிகளாக விளங்குகின்றன.

குழித்துறை தனி மறைமாவட்டமாக உருவாகின்ற அதே நேரத்தில், கோட்டாறு என்னும் புதிய மறைமாவட்டமும் உருப்பெற்று விட்டது. எனவே, இரு மறைமாவட்டங்களும் ஒன்றுசேர்ந்து மகிழ்வது பொருத்தமே. கோட்டாறு-குழித்துறை மறைமாவட்டங்களின் வரலாற்றுப் பின்னணி என்ன?

குழித்துறை மறைமாவட்டம் உருவான வரலாற்றை எடுத்துக் கூறும் வகையில் அந்த வரலாற்றுக் காலத்தை மூன்று பெரிய காலக் கட்டமாகப் பார்க்கலாம்:

1) கோட்டாறு தனி மறைமாவட்டம் ஆவதற்கு முற்பட்ட காலம்

2) கோட்டாறு மறைமாவட்டத்தின் முதல் அறுபது ஆண்டுகள்

3) குழித்துறை மறைமாவட்ட உருவாக்கச் செயல்பாடு நிகழ்ந்த காலம்

முதல் கட்டம்

கோட்டாறு தனி மறைமாவட்டம் ஆவதற்கு முற்பட்ட காலம்

1) பண்டைய தடயங்கள்

தமிழகத்தின் தென்முனையாம் குமரி நிலத்தில், கோட்டாறு மறைமாவட்டப் பகுதியில், கிறிஸ்தவ சமய நம்பிக்கை தொன்றுதொட்டே நிலவியதற்கான அகழ்வுத் தடயங்கள் சின்னமுட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருத்தூதர் புனித தோமா கேரளத்திலும் கோட்டாறு மறைமாவட்டம் அமைந்துள்ள குமரி நிலப்பகுதியிலும் நற்செய்தியை அறிவித்து, வழிபாட்டு இடங்களை நிறுவினார் என்னும் தொல்மரபும் பல நூற்றாண்டுகளாக வழங்கிவருகின்றது. திருவிதாங்கோட்டில் அமைந்து, தற்போது சிரிய மலங்கரை ஆர்த்தடாக்ஸ் சபையினரின் பொறுப்பில் உள்ள “அரப்பள்ளி” என்ற சிறு கோவில், திருத்தூதர் புனித தோமா தொடங்கிய வழிபாட்டுத் தலத்தின் மீது எழுந்தது என்னும் மரபும் உள்ளது.

புனித தோமாவின் இந்திய மறைப்பணி பற்றிய மரபுவழிச் செய்தியை உறுதிப்படுத்துவதற்கு அறுதியான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கவில்லை என்றாலும், குமரி நிலப்பகுதியில் புனித பிரான்சிஸ் சவேரியார் பணியாற்றத் தொடங்கிய காலத்திற்கு முன்னரே கிறிஸ்தவ நம்பிக்கை அங்கு வேரூன்றத் தொடங்கிவிட்டிருந்தது என்பதற்கு உறுதியான வரலாற்று ஆதாரம் உள்ளது.

2) பரவர் குலத்தவர் கிறிஸ்தவத்தைத் தழுவுதல்

16ஆம் நூற்றாண்டில் அரேபிய வணிகரும் முசுலிம்களும் சோழமண்டலக் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித்தலிலும் முத்துக்குளித்தலிலும் ஈடுபட்டிருந்த பரவர் குல மக்கள்மீது தாக்குதல்கள் நடத்திய வேளையில் பரவர் குலத் தலைவர்கள் போர்த்துகீசியரின் பாதுகாப்பை நாடினர். பாதுகாப்பு அளித்த போர்த்துகீசியர் குமரி முதல் இராமேசுரம் வரையிலான பகுதியில் வாழ்ந்த சுமார் இருபது ஆயிரம் பரவர்களுக்குத் திருமுழுக்கு அளித்து அவர்களைக் கிறிஸ்தவ மதத்தில் சேர்த்தனர். 1536-1537 ஆண்டளவில் இந்த “குழு மதமாற்றம்” நிகழ்ந்தது.

புதிதாக கிறிஸ்தவ சமயத்தைத் தழுவிய இவர்களுக்கு மறைப்பணி புரிய போதிய பணியாளர்கள் இல்லாததால் தளர்நிலையிலிருந்த அவர்களுடைய நம்பிக்கையை உறுதிப்படுத்தவும் மேலும் பலரைக் கிறிஸ்தவத்துக்குக் கொணரவும் புனித பிரான்சிஸ் சவேரியார் அவர்களிடையே 1542 அக்டோபர் மாதத்திலிருந்து 1543 செப்டம்பர் வரை பணிபுரிந்தார். சில மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் பெப்ருவரி 1544இல் தமது பணியைத் தொடர்ந்தார். இவ்வாறு, குமரி நிலப்பகுதியில், குறிப்பாக,கன்னியாகுமரி, கோவளம், இராஜாக்கமங்கலம் போன்ற பரவர் கிராம மறைப்பணித் தளங்களில் கத்தோலிக்க சமயம் தளிர்விடத் தொடங்கியது.

குமரிப் பகுதியில் சவேரியார் ஆற்றிய பணி மறைப்போதகம் மட்டுமன்று. புதிதாக கிறிஸ்தவத்தைத் தழுவிய பரவ மக்களுக்கு அவர் துன்பவேளையில் துணையாகவும் வந்தார்.

தம் மக்களாகிய கிறிஸ்தவர்களைக் கிறிஸ்தவரல்லாதவர்களின் தாக்குதல்களிலிருந்தும் போர்த்துகீசியர்களின் அட்டூழியங்களிலிருந்தும் பாதுகாத்த சவேரியாரை மக்கள் “பெரிய தந்தை” என்னும் பொருள்தருகின்ற ”வலிய பாதிரி” என்னும் பெயரிட்டு அன்புடன் அழைத்தார்கள்.

3) முக்குவர் குலத்தவர் கிறிஸ்தவத்தைத் தழுவுதல்

சவேரியாரின் அடுத்த மறைப்பணி திருவிதாங்கூர் இராச்சியத்தில் முக்குவர் நடுவே நிகழ்ந்தது. திருவிதாங்கூரை ஆட்சி செய்த இராம வர்மா என்ற உண்ணிகேரள திருவடியும் அவருடைய சகோதரர் மார்த்தாண்ட வர்மாவும் பாண்டிய மன்னன் படையெடுப்பிலிருந்து தம்மைப் பாதுகாக்க போர்த்துகீசியரின் உதவியை நாடினர். அவ்வாறு தமக்குப் படை உதவியும் பாதுகாப்பும் அளித்தால் திருவிதாங்கூர் இராச்சியத்தில் மீனவ மக்களாகிய முக்குவர் குலத்தாரிடையே கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்கு அனுமதி அளிப்பதாகவும் வாக்குறுதி கொடுத்தனர். பரவ மக்களிடையே கிறிஸ்தவ மறையைப் பரப்பிய சவேரியார் தங்கள் பகுதியிலும் அவ்வாறே செய்யவேண்டும் என்று மணக்குடி முக்குவர் விரும்பிக் கேட்டனர். திருவிதாங்கூர் மன்னர்களும் முக்குவர்கள் தமக்குக் கீழ்ப்படிந்திருப்பது போலவே, “வலிய பாதிரி” (சவேரியார்) சொல்வதைக் கேட்டு, தங்களுக்கு விருப்பமானால் கிறிஸ்தவர்களாக மாறத் தடையில்லை என்று அறிவித்தனர். மேலும், திருவிதாங்கூர் மன்னரான இராம வர்மா 2000 பணத்தை சவேரியாரிடம் கொடுத்து அதைக் கொண்டு கோவில்கள் கட்ட அனுமதித்தார்.

பலவகையான வரிச்சுமைகளால் அழுத்தப்பட்டு, அரசு அதிகாரிகளால் ஒடுக்கப்பட்டு, சமூக மாண்பு மறுக்கப்பட்டு, வறுமையில் வாழ்ந்த அம்மக்கள், தங்களது இழிநிலையிலிருந்து விடுபட்டு, திருமுழுக்குப் பெற்று, போர்த்துகீசியரின் பாதுகாப்பைப் பெறுவதை ஒரு வரப்பிரசாதமாகவே கருதினர்.

இந்த நல்ல தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு சவேரியார் முக்குவர் வாழ்ந்த கடலோரக் கிராமங்களை ஒவ்வொன்றாகக் கால்நடையாகச் சென்று சந்தித்து, 1544 நவம்பரிலிருந்து 1544 டிசம்பர் வரை அவர்களுக்குக் கிறிஸ்தவ மறையை அறிவித்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்குத் திருமுழுக்கு அளித்து அவர்களை இந்து சமயத்திலிருந்து மனம் திருப்பி கிறிஸ்தவத்தைத் தழுவச் செய்தார்.

சவேரியார் தம்மோடு ஒருசில துணையாளர்களை அழைத்துக்கொண்டு, திருவிதாங்கூர் இராச்சியத்தின் வட எல்லையாகிய பூவாற்றிலிருந்து முக்குவ மக்களிடையே தம்முடைய மறைப்பணியைத் தொடங்கினார். இவ்வாறு அவர் கிறிஸ்தவ சமயத்தைப் போதித்த முக்குவர் கிராமங்கள் பூவாறு, கொல்லங்கோடு, வள்ளவிளை, தூத்தூர், புதுத்துறை, தேங்காப்பட்டணம், இனையம், மிடாலம், வாணியக்குடி, குளச்சல், கடியபட்டணம், முட்டம், பள்ளம் ஆகும். அத்தருணத்தில் யாழ்ப்பாண மன்னன் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திக் கொல்கிறான் என்ற அதிர்ச்சிதரும் செய்தியைக் கேட்டு சவேரியார் முக்குவ கிராமங்களில் திருமுழுக்குக் கொடுப்பதை நிறுத்திவிட்டு கொச்சிக்கு விரைந்தார். இவ்வாறு, மணக்குடிக்கு மட்டும் சவேரியாரால் நேரடியாகச் சென்று திருமுழுக்குக் கொடுக்க இயலவில்லை. ஆனால் அங்கு சென்று திருமுழுக்குக் கொடுக்க அவர் தம் துணையாளரான மான்சீலாஸ் என்பவரை அனுப்பிவைத்தார்.

4) உள்நாட்டு மக்களிடையே கிறிஸ்தவம் பரவுதல்

கடலோரத்தில் மக்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்தபின் சவேரியார் குமரிப் பகுதியின் உள்நாட்டு மக்களையும் கிறிஸ்தவ மறையில் சேர்க்க ஆர்வம் கொண்டார். ஆனால் அன்றைய சமூக-அரசியல் நிலை அதற்குத் தடையாக அமைந்தது. உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்று வேறுபாடு கற்பித்து, பெரும்பாலான மக்கள் அடிமைகளைப் போல நடத்தப்பட்ட காலம் அது. இந்து சமயத்தின் சாதி அமைப்பைத் தளர்த்திவிட்டால் தம்முடைய அதிகாரம் பறிபோய்விடும் என்று உயர்சாதியினர் நினைக்க,நாட்டில் கிறிஸ்தவம் பரவினால் சமூகக் கட்டமைப்பு தளர்ந்துவிடும் என்று ஆட்சியாளர்கள் எண்ணிய காலம் அது.

இப்பின்னணியில்தான் திருவிதாங்கூர் மன்னர்கள் விஜயநகரப் படைகளோடு மோதினர். விஜயநகர அரசைப் பகைக்க விரும்பாத போர்த்துகீசியர்கள் திருவிதாங்கூர் மன்னர்களுக்கு உதவிசெய்ய மறுத்துவிட்டனர். இதனால் கோபமுற்ற திருவிதாங்கூர் மன்னர்கள் இந்தியாவில் பணிசெய்த போர்த்துக்கல் ஆளுநர்களையும் அவர்களுடைய மறைபரப்பாளர்களையும் தண்டிக்க எண்ணி, தமது இராச்சியத்தில் இனிமேல் கிறிஸ்தவத்தைப் பரப்பக் கூடாது என்று தடைவிதித்தனர். இயேசு சபையைச் சார்ந்த தந்தை பிரான்சிஸ் ஹென்றிக்கெஸ் என்பவரையும் அவருடைய ஒரே துணையாளரான சகோதரர் பல்தசார் நூனெஸ் என்பவரையும் இராச்சியத்திலிருந்து வெளியேற்றினர்.

இவ்வாறாக, கடலோரத்திலேயே முதலில் கவனம் செலுத்திய போர்த்துகீசிய மறைப்பணியாளர்கள் உள்நாட்டுப் பகுதிகளில் கிறிஸ்தவத்தைப் பரப்புவதற்குச் சிறிது காலம் பிடித்தது. இருப்பினும், கடலோரப் பரவர் மற்றும் முக்குவர் குழுவாகக் கிறிஸ்தவர்களான சுமார் 50 ஆண்டுகளில், அதாவது 1603இல் உள்நாட்டுப் பகுதிகளில் ஏழு கோவில்கள் கட்டப்பட்டன. கடற்கரை கிராமங்களில் திருமுழுக்குப் பெற்று, தொழில் காரணமாக உள்நாடு சென்ற மீனவருக்கு மறைப்பணி புரிய குருக்கள் இல்லாமையால் அவர்களது கிறிஸ்தவ நம்பிக்கை நலிவுற்றது.

இயேசு சபைக் குருவான அந்திரேயா புச்சேரியோ, திருவிதாங்கூர் மன்னர் வீர ரவிவர்மாவிடம் உதவிபெற்று கல்குளத்தில் பத்மநாபபுரம் அரண்மனைக்கு உள்ளேயும் வெளியேயும் இரு கோவில்கள் கட்டினார். மூன்றாவதொரு கோவில் கோட்டாற்றில் அரசன் அன்பளிப்பாகக் கொடுத்த ஒரு தோட்டப்பகுதியில் 1603இல் கட்டப்பட்டது. கல்லால் கட்டப்பட்டு, மூவொரு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அக்கோவிலில் தந்தை புச்சேரியோ புனித சவேரியாரின் திருப்படம் ஒன்றை நிறுவியதைத் தொடர்ந்து சவேரியார் பக்தி இன்னும் அதிகமாக வளர்ந்தது.

கோட்டாறு கோவிலைக் கட்ட மணக்குடி, பள்ளம், பெரியகாடு, ராஜாக்கமங்கலம் ஆகிய கிறிஸ்தவ கிராமங்களும் உதவிசெய்தன. சில ஆண்டுகளுக்குள் கோட்டாறு கோவில் சவேரியார் பக்திக்குப் புகழ்பெற்ற ஒரு திருத்தலமாக மாறியது.

கோட்டாற்றுக்குக் கிளைப்பங்குகளாக மார்த்தாண்ட நல்லூர் (மாத்தால்?), ஆளூர், கல்குளம் ஆகியவை அமைந்தன. இந்த கிளைப்பங்குகளின் பல கிராமங்களிலும் மலைப் பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் பரவலாக வாழ்ந்தார்கள்.

6) நாடார் சமூகத்தினர் கத்தோலிக்க மறையைத் தழுவுதல்

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் வாழ்ந்த நாடார் சமூகத்தினர் 17ஆம் நூற்றாண்டில் அங்கும் இங்குமாக சிறு எண்ணிக்கையில் கிறிஸ்தவ சமயத்தை ஏற்று, திருமுழுக்குப் பெற்றனர். என்றாலும், அவர்களுள் பெரும்பான்மையோர்17ஆம் நூற்றாண்டின் இறுதிவரையும் இந்துக்களாகவே இருந்தனர்.

குமரி நிலப்பகுதியில் 1550-1600 காலக்கட்டத்தில் சமூக-அரசியல் குழப்பம் நிலவியது. விஜயநகரத்தின் பிடியிலிருந்து விடுபட்ட பாண்டிய நாடு திருவிதாங்கூரைத் தாக்கியது. திருவிதாங்கூர் மக்கள் வரிச்சுமையால் அழுத்தப்பட்டு அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார்கள்.

அதே நேரத்தில் போர்த்துகீசிய மன்னரின் பாதுகாப்பின் கீழ் பணிபுரிந்த கிறிஸ்தவ மறைபரப்பாளர்கள் பெரும்பாலும் கடற்கரையிலேயே கவனம் செலுத்தினர். கடல் வணிகத்தைத் தக்கவைப்பதில் போர்த்துகல் ஆட்சியாளர்கள் குறியாக இருந்தது இதற்கு ஒரு முக்கிய காரணம். மேலும் திருவிதாங்கூர் இராச்சியத்தைப் பொறுத்தமட்டில் உள்நாட்டு இந்துக்களைக் கிறிஸ்தவர்களாக்குவது தடைசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐரோப்பாவில் நடந்த ஒரு சில வரலாற்று நிகழ்வுகள் குமரி,திருவிதாங்கூர், பாண்டிநாடு போன்ற பகுதிகளில் கிறிஸ்தவம் பரவிட வாய்ப்பாக அமைந்தன. திருச்சபையின் செயல்பாடுகளில் போர்த்துகல் ஆட்சியாளர்கள் தலையிடுவதைக் கட்டுப்படுத்தவும், குடியேற்ற நாடுகளில் புரட்டஸ்தாந்து கிறித்தவம் பரவுவதை நிறுத்தவும் வேண்டுமென்றால் குடியேற்ற அரசின் கட்டுப்பாட்டைத் தாண்டிய விதத்திலும் திருச்சபையின் நேரடி கண்காணிப்பிலும் செயல்படுகின்ற மறைபரப்புக் குருக்கள் தேவை என்ற அடிப்படையில் உரோமையில் “மறைபரப்புப் பேராயம்”(Congregation for the Propagation of the Faith) 1622இல் தொடங்கப்பட்டது. கத்தோலிக்க திருச்சபையின் துறவற சபைகள் சார்ந்த குருக்கள் மறைபரப்புவதற்காக அனுப்பப்பட்டார்கள். குறிப்பாக மதுரையைப் பணிமையமாகக் கொண்டு இயேசு சபையினர் போர்த்துகீசிய கட்டுப்பாட்டுக்கு உட்படாமல் உள்நாட்டுப் பகுதிகளிலும் கிறிஸ்தவத்தைக் கொண்டுசென்றனர்.

ஆனால், அரசியல் காரணங்களுக்காக ஐரோப்பாவில் 1773இல் இயேசு சபை தடைசெய்யப்பட்டது. எனவே, மதுரை பணித்தளத்தின் செயல்பாட்டில் தளர்ச்சி ஏற்பட்டது. 1814இல் இயேசு சபை மீண்டும் செயல்படத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து திருச்சியை மையமாகக் கொண்டு புதிய மதுரை பணித்தளம் செயல்படலாயிற்று.

மேற்கூறிய அரசியல் நிகழ்வுகளும், ஐரோப்பாவில் சீர்திருத்த கிறிஸ்தவம் பரவிய நிகழ்வும் குடியேற்ற நாடுகளில் கிறிஸ்தவம் பரவுவதில் பாதிப்பை ஏற்படுத்தின.

இப்பின்னணியில் தான் குமரி நிலப்பகுதியில் நாடார் சமூகத்தவர் கத்தோலிக்க சமயத்தைத் தழுவுவதற்கு இயேசு சபையினரின் மதுரைப் பணித்தளத்தின் கீழ் இருந்த கயத்தாறு மற்றும் காமநாயக்கன்பட்டியின் நாடார் கிறிஸ்தவ சமூகங்கள் துணையாக இருந்தன என்று இயேசு சபை குறிப்பு கூறுகிறது. 1653இல் கயத்தாற்றிலும், 1666இல் காமநாயக்கன்பட்டியிலும் நாடார் கத்தோலிக்கரும் அவர்களுக்கென்று கோவிலும் இருந்தது. 1684 அளவில் காமநாயக்கன்பட்டி இயேசு சபை மதுரைப் பணித்தளத்தின் தென்பகுதிக்கு மையமாயிற்று. ஆண்டு ஒன்றுக்கு சுமார் 600 பேர் புதிதாகத் திருமுழுக்குப் பெற்றனர். அங்கு கத்தோலிக்கராகத் திருமுழுக்குப் பெற்ற நாடார் சிலர் தங்கள் சமய நம்பிக்கையின் பொருட்டுத் துன்புறுத்தப்பட்ட வேளையில் குமரி நிலத்தில், கோட்டாறு பகுதிகளில் வந்து பதினெட்டாம் நூற்றாண்டில் குடியேறினர் என்பது வரலாறு.

குமரி நிலப் பகுதியில் நாடார் சமூகத்தினர் பலருக்கு 1685ஆம் ஆண்டளவில் முதன்முதலாகத் திருமுழுக்கு அளித்தவர் அருள்தந்தை பீட்டர் மொராத்தோ (Peter Morato) என்னும் இயேசு சபைக் குரு ஆவார். நாடார் சமூகத்தினர் நடுவே கிறிஸ்தவ சமயத்தை அறிவிக்கும் பொறுப்பு அப்போது கோட்டாறு பங்குத் தளத்திற்குப் பொறுப்பாக இருந்த அருள்தந்தை ஜாண் மேனார்து (John Maynard) என்னும் இயேசு சபைக் குருவிடம் 1698இல் அவருடைய மாநிலத் தலைவரான அந்திரேயா கோமஸ் என்பவரால் ஒப்படைக்கப்பட்டது. 1699இல் நிறுவப்பட்ட வடக்கன்குளம் பணித்தளத்தை மையமாகக் கொண்டு இயேசு சபைக் குரு பெர்னார்து தே சா என்பவரும் பிற இயேசு சபைக் குருக்களும் நாடார் மற்றும் வெள்ளாளர் நடுவே கிறிஸ்தவ மறையைப் பரப்பி, பலருக்குத் திருமுழுக்கு அளித்தனர்.

தந்தை மேனார்து நாடார் குல மக்கள் பலரைக் கிறிஸ்தவத்திற்குக் கொணர்ந்தார். மேலும் அவர் இந்திய சந்நியாசி போன்று உடையணிந்து நாயர்கள் நடுவே பணிபுரிந்து அவர்களையும் கிறிஸ்தவர்கள் ஆக்கினார். ஆனால், நாயர்கள், தம்மைவிடவும் சமூகநிலையில் தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்ட நாடார்களுக்கும் தந்தை மேனார்து கிறிஸ்தவத்தைப் போதித்து அவர்களைக் கிறிஸ்தவர்களாக்கினார் என்று குறைகூறி, இந்துமதத்திற்கே திரும்பிவிட்டனர்.

மேலும், தே சா அடிகள் கோட்டாற்றுக்குக் கிழக்கே சுமார் 5 மைல் தொலையில் உள்ள மருங்கூர் கிராமத்தில் ஒரு கோவில் கட்டி எழுப்பினார். அங்கும் நாடார் மற்றும் வெள்ளாளர் பலர் கிறிஸ்தவத்தைத் தழுவினார்கள். இவர்கள் புனித அருளானந்தரின் கைகளால் திருமுழுக்குப் பெற்றிருக்கலாம் என்று மதுரைப் பணித்தளத்தில் மறைப்பணி ஆற்றிய இயேசு சபை வரலாற்றாசிரியர் லியோன் பெஸ் (Leon Besse) என்பவர் கருதுகிறார்.

(ஆதாரம்: லியோன் பெஸ் எழுதிய The Madurai Mission என்னும் நூல். முதன்முறையாக பிரஞ்சு மொழியில் 1914இல் திருச்சிராப்பள்ளியில் வெளியானது. காண்க: பக்கங்கள் 570, 577)

மேற்கூறிய மறைப்பணி நிகழ்ந்த அதே காலக் கட்டத்தில் உள்நாட்டில் மீன்வியாபாரம் செய்து வாழ்ந்துவந்த மீனவர் சமூகங்களைச் சார்ந்த பலரும் கத்தோலிக்கராக மாறினார்கள். 1713இல் குமரி நிலப்பரப்பில் 24 முக்குவர் மற்றும் பரவர் சவளக்காரர் குடியிருப்புகள் இருந்ததாக இயேசு சபைக் குருவும் வரலாற்றாசிரியருமான தோமினிக் ஃபெரோலி என்பவர் கூறுகிறார்.

(ஆதாரம்: சே ரோ. நற்சீசன் எழுதிய “குமரிக் கிறிஸ்தவர்களின் பயணப் பாதை”, 2010 பதிப்பு, பக். 76)

7) சாந்தாயி நாடாத்தி என்னும் மறைபரப்பாளர்

இயேசு சபையைச் சார்ந்த பிரஞ்சு மறைபரப்பாளர் அருள்திரு அதிரியான் கவுசானல் இருதயகுளத்தில் “திரு இருதய சகோதரர்கள் சபை”யை 1925ஆம் ஆண்டில் தோற்றுவித்தவர். வடக்கன்குளத்தில் பணியாற்றிய அவர் பதித்துள்ள சில குறிப்புகளைக் கீழே காணலாம்:

சுமார் 1680ஆம் ஆண்டளவில், சாந்தாயி என்ற பெயர்கொண்ட சாணார் பெண் ஒருவர் தம் கணவர் ஞானமுத்து என்பவரோடு ஆனக்கரை பங்கின் தோப்புவிளை என்ற ஊரிலிருந்து வந்தார். சாந்தாயி இன்று வடக்கன்குளம் என்று அறியப்படுகின்ற ஊரில் கத்தோலிக்க கிறிஸ்தவ சமயம் பரவுவதற்குக் காரணமாக இருந்தவே அவரே. அவர் மனம் திருப்பியவர்களுள் மிகப் பலர் நாடார் சமூகத்தினரே. மேலும், திருவிதாங்கூரிலிருந்து பாண்டிய இராச்சியத்திற்குச் செல்லும் வழியில் வடக்கன்குளம் இருந்ததால் அங்கு நிறுவப்பட்ட மறைப்பணித் தளம் அன்றைய கோட்டாறு மறைமாவட்ட உள்நாட்டுப் பகுதிகளில் கத்தோலிக்க சமயம் பரவுவதற்கு மிகவும் துணையாக இருந்தது.

1720ஆம் ஆண்டளவில் வடக்கன்குளத்தை மையமாகக் கொண்ட தென் திருவிதாங்கூர் பகுதியில் சுமார் 3000 நாடார்கள் கத்தோலிக்கர் ஆயினர்.

இக்குறிப்புகள் மதுரை பணித்தளத்தில் பணிபுரிந்த இயேசு சபை குருக்களின் பதிவுகளிலிருந்து அறியக் கிடக்கின்றன.

(ஆதாரம்: அருள்திரு அதிரியான் கவுசானல், சே.ச., திருநெல்வேலி வரலாற்றுக் குறிப்புகள், திருநெல்வேலி, 1925, பக். 140-142).

1685இலிருந்துகுமரிப்பகுதிநாடார்குலமக்கள்பெருமளவில்கத்தோலிக்கர்கள்ஆனார்கள். அவர்களதுமுக்கியபணிமையங்களாககாரங்காடு(முளகுமூடுமறைவட்டம் – கல்குளம்வட்டம்), வேங்கோடு(திரித்துவபுரம்மறைவட்டம் – விளவங்கோடுவட்டம்) ஆகியவைஅமைந்தன. காரங்காட்டின்கிளைப்பணித்தளங்களாக18ஆம்நூற்றாண்டில்இரணியல், மாங்குழி, முளகுமூடு, மணலிக்கரை, மாத்திரவிளை, ஆலஞ்சி, முள்ளங்கினாவிளை, பழையகடைஆகியஇடங்கள்விளங்கின. அதுபோல,வேங்கோடுபணிமையத்தின்கீழ்புதுக்கடை, களியக்காவிளை, குழித்துறை, பாறசாலைஆகியகிளைப்பணித்தளங்கள்அமைந்தன.

1871ஆம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி கோட்டாறு மறைமாவட்டப் பகுதியில் சுமார் 44,500 கத்தோலிக்கர் வாழ்ந்தனர்.

மறைத் தளம்கத்தோலிக்கர் எண்ணிக்கை
1) கன்னியாகுமரி4000
2) புத்தன்.துறை3300
3) பிள்ளைத் தோப்பு3200
4) குளச்சல்6000
5) குறும்பனை?
6) கோட்டாறு6890
7) காரங்காடு6500
8) வேங்கோடு4000
9) இனயம் (தேங்காப்பட்டணம்)3000
10) முளகுமூடு7000
மொத்தம்44,490

மேலும், உள்நாட்டு மீனவர்களும் பிற மக்களும் கத்தோலிக்க சமயத்தைத் தழுவியதால் ஒருவர் மற்றவருக்குத் துணையாக இருந்திருப்பர் என்று கூறலாம்.

(ஆதாரம்: சே.ரோ. நற்சீசன், குமரிக் கிறிஸ்தவர்களின் பயணப் பாதை, நாஞ்சில் பதிப்பகம், 2010, பக். 79-83).

8) துன்பங்களுக்கு நடுவே கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்த மறைசாட்சிகள்

அருளாளர் தேவசகாயம் பிள்ளை (1712-1752)

குமரிப்பகுதியில்கத்தோலிக்கசமயம்வேரூன்றஉழைத்தவரானசவேரியார்இறந்துசரியாகஇருநூறுஆண்டுகளுக்குப்பின்னர், கோட்டாறுமறைமாவட்டத்தின்மறைசாட்சிதேவசகாயம்பிள்ளைகிறிஸ்தவநம்பிக்கைக்காக1752, சனவரி14நள்ளிரவில்ஆரல்வாய்மொழிகாற்றாடிமலையில்கொல்லப்பட்டார். அவருக்கு2012, டிசம்பர்2ஆம்நாளில் “முத்திப்பேறுபெற்றவர்” (அருளாளர்) பட்டம்வழங்கப்பட்டதுகோட்டாறுவரலாற்றில்மறக்கமுடியாதநிகழ்ச்சிஆகும்.

அருளாளரும்மறைசாட்சியுமானதேவசகாயம்கோட்டாறுமறைமாவட்டத்தில்நாயர்குலத்தில்உதித்தவராயினும்அனைத்துத்தரப்பினராலும்போற்றப்படுகின்றஒருகிறிஸ்தவநம்பிக்கைவீரராகத்திகழ்கின்றார்.

இன்றையகுழித்துறைமறைமாவட்டப்பகுதியில்நட்டாலம்ஊரில்1712ஆம்ஆண்டுபிறந்ததேவசகாயத்தின்இயற்பெயர்நீலம்பிள்ளை. எஸ்தாக்குடிலனாய்என்றடச்சுஇராணுவஅதிகாரிநீலம்பிள்ளைக்குக்கிறிஸ்தவமறையின்உண்மைகளைஎடுத்துக்கூறினார். நீலம்பிள்ளைதமதுபூர்வீகஇந்துசமயத்தைவிட்டுவிட்டு, வடக்கன்குளத்தில்இயேசுசபைமறைப்பணித்தளத்தில்கத்தோலிக்கராகத்திருமுழுக்குப்பெற்றார். மார்த்தாண்டவர்மாமன்னர்திருவிதாங்கூரில்ஆட்சிசெய்தஅக்காலத்தில்(1729-1758), தேவசகாயம்பிள்ளைதமதுகிறிஸ்தவநம்பிக்கையின்பொருட்டுபலதுன்பங்களையும்இன்னல்களையும்அனுபவித்தார். இறுதியாக, திருவிதாங்கூர்இராச்சியத்தின்தெற்குஎல்லையில்ஆரல்வாய்மொழிகாற்றாடிமலையில்சுட்டுக்கொல்லப்பட்டார். அவர்இறந்தஇடம்இன்றையபுதியகோட்டாறுமறைமாவட்டத்தில்உள்ளது.

தேவசகாயம்பிள்ளையின்வீரமரணத்தைக்கோட்டாறுமறைமாவட்டமக்கள்ஒருபோதும்மறந்ததில்லை. அவர்பிறந்துமூன்றுநூற்றாண்டுகளுக்குப்பின்அவருக்கு “அருளாளர்” (முத்திப்பேறுபெற்றவர்) என்னும்பட்டம்2012, டிசம்பர்2ஆம்நாள்வழங்கப்பட்டபோது, கோட்டாறுமறைமாவட்டம்அந்நிகழ்ச்சியைமிகச்சிறப்புடன்கொண்டாடியது.

இன்றுஅருளாளரும்மறைசாட்சியுமானதேவசகாயம்பிள்ளைபுதியகுழித்துறைமாவட்டத்திற்கும்புதியகோட்டாறுமறைமாவட்டத்திற்கும்பொதுவானபாதுகாவலராகஉள்ளார்என்பதுகுறிப்பிடத்தக்கது. அவர்பிறந்தஇடம்குழித்துறைமறைமாவட்டத்திலும்அவர்கிறிஸ்தவநம்பிக்கையின்பொருட்டுஉயிர்நீத்தஇடம்புதியகோட்டாறுமறைமாவட்டத்திலும்இருப்பதுஇந்தஇருமறைமாவட்டங்களும்நல்லுறவிலும்இணக்கத்திலும்தொடர்ந்துசெயல்படுவதற்குஒருமுன்குறியாகஉளதுஎனலாம்.

தேவசகாயம்பிள்ளைமறைசாட்சியாகஉயிர்துறந்தநிகழ்ச்சியைதிருவிதாங்கூர்பகுதியில்பணியாற்றியகார்மேல்சபைத்துறவியானபவுலீனுஸ்என்பவர்1794இல்இலத்தீனில்எழுதியநூலில்விவரிக்கிறார். (காண்க: கிழக்குநாடானஇந்தியாவில்கிறிஸ்தவம் – India Orientalis Christiana – பக். 167-168).

கத்தோலிக்கநாடார்துன்புறுத்தப்படுதல்

கார்மேல்சபைத்துறவிபவுலீனுஸ்மேலேகுறிப்பிட்டநூலில்தேவசகாயம்பிள்ளையின்வீரமரணம்பற்றிப்பேசியதைத்தொடர்ந்து, திருவிதாங்கூரில்கிறிஸ்தவநாடார்துன்புறுத்தப்பட்டதையும்விரிவாகஎடுத்துரைக்கிறார். அதன்சுருக்கம்இங்கேதரப்படுகிறது:

1780ஆம்ஆண்டில்திருவிதாங்கூர்இராச்சியத்தில்நாகம்பிள்ளைசர்வாதிகாரியக்காரன்என்றஅரசுநிர்வாகிபணஆசையால்தூண்டப்பட்டு, கிறிஸ்தவநாடார்மக்கள்தங்கள்வீட்டிலுள்ளபொன், வெள்ளிபோன்றஅனைத்துவிலையுயர்ந்தபொருள்களையும்எடுத்துதன்னிடம்கொண்டுவந்துகொடுக்கவேண்டும்என்றுகட்டாயப்படுத்தினார். அவ்வாறுசெய்யாவிட்டால்திருவிதாங்கூர்குலதெய்வமானபத்மநாபசுவாமிசிலையைவழிபடவேண்டும்அல்லதுஅவர்களுடையஉயிருக்கேஆபத்துஎன்றும்நிபந்தனைவிதித்தார். உயிருக்குஅஞ்சிபலமக்கள்மலைகளுக்குஓடிப்போயினர். கையில்அகப்பட்டசுமார்300 பேரில்சிலர்சிலையைவழிபட்டனர், ஆனால்எஞ்சியவர்கள்நாகம்பிள்ளையின்அச்சுறுத்தலுக்குமசியவில்லை.அவர்களைவேங்கோடு, தக்கலை, திருவிதாங்கோடுஆகியஇடங்களுக்குஇழுத்துச்சென்று, கட்டிமரத்திலிருந்துதலைகீழாகத்தொங்கவிட்டுஇரத்தம்சிந்தும்அளவுக்குக்கம்புகளால்அடித்துவதைத்தார்கள். விழுந்தஅடிகளைத்தாங்கமுடியாமல்பெலவேந்திரன், அருளன்என்றஇருவர்உயிர்நீத்தனர்.

தன்தந்தைஇவ்வாறுகொடூரமாகக்கொல்லப்பட்டதைஅங்குநின்றுகொண்டிருந்தபத்துவயதுசிறுவன்ஒருவன்பார்த்துநெஞ்சம்குமுறினான். அவன்தான்அருளன்மகனானஅருளப்பன். அவன்நீதிபதியைப்பார்த்து, “என்அப்பாகிறிஸ்தவர்என்பதற்காகஅவரைநீங்கள்இப்படிக்கொன்றீர்கள்என்னால், என்னையும்கொல்லுங்கள், நானும்ஒருகிறிஸ்தவன்தான்” என்றுசவால்விட்டுக்கூறினான். சிறுவனைநீதிபதிமிரட்டிப்பார்த்தார். ஆனால்அவன்உறுதியாகஇருந்தான். அவனுக்கும்அடிமேல்அடிகொடுத்துஅடிபணியவைக்கமுயன்றார்அதிகாரி. ஆனால்அருளப்பனோ, ”என்உடலைவேண்டுமென்றால்நீர்துண்டுதுண்டுஆக்கிவிடலாம். ஆனால்எனதுஆன்மாவைஎன்கடவுளிடமிருந்துநீர்பிரிக்கமுடியாது” என்றுவீரத்தோடுபதிலிறுத்தான்.

தோல்வியுற்றநீதிபதிகிறிஸ்தவர்களைமறுநாளும்அடித்துத்துன்புறுத்தி, அவர்களுடையகாயங்களில்மிளகுப்பொடிதூவிசித்திரவதைசெய்துபார்த்தான். அவர்கள்தங்கள்கிறித்தவநம்பிக்கையில்விடாப்பிடியாகஇருந்ததைக்கண்டு, தன்மேலதிகாரியானநாகம

Updated on 19 Mar 2019, 10:30